மாஸ்கோ: ரஷ்யாவின் பேரன்ட்ஸ் கடல் பகுதியில் படகில் பயணித்த 19 பேர் கொண்ட குழு மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது நோவாயா ஜெம்ல்யா தீவுப் பகுதி அருகே எதிர்பாராத விதமாக படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அந்நாட்டு பேரிடர் மீட்புக் குழுவினர் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இருவரை பாதுகாப்பாக மீட்டனர். காணாமல் போன 17 பேரை தேடும் பணித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மோசமான வானிலை காரணமாக, விமானம் மூலம் மீட்புப் பணியில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மீன் பிடிப்பு கலன்களில் அதிக அளவிலான பனி உறைந்ததே விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: தென் கொரியாவில் உறுதி செய்யப்பட்ட புதிய வகை கரோனா