ETV Bharat / international

ஏமன் குண்டுவெடிப்புத் தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு! - ஏடென் விமான நிலையம்

ஏமன்: ஏமன் நாட்டின் ஏடென் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும், 110 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

ஏமன் குண்டுவெடிப்பு தாக்குதல்: 25 பேர் உயிரிழப்பு!

author img

By

Published : Dec 31, 2020, 8:48 AM IST

ஏமன் நாட்டில் புதிதாக அமைந்த அரசின் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள அமைச்சர்கள், சவூதியிலிருந்து அந்நாட்டு விமான நிலையத்தில் வந்திறங்கிய சிறிது நேரத்தில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் அமைச்சரவை உறுப்பினர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

சம்பவத்தின்போது ஐந்து பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதலில் சிக்கி 110-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015ஆம் ஆண்டுமுதல் உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுதி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

இந்நிலையில், சவுதி ஆதரவுடன் புதிதாக அமைந்துள்ள ஏமன் அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் விமானம் மூலம், அந்நாட்டின் எடென் விமான நிலையத்திற்கு நேற்று வந்திறங்கினர். அமைச்சரவை உறுப்பினர்கள் வந்திறங்கிய சில நிமிடங்களில் விமான நிலையத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில், 25 பேர் உயிரிழந்தனர். மேலும், 110 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குண்டுவெடிப்பு தாக்குதல்
குண்டுவெடிப்பு தாக்குதல்

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை 'கோழைத்தனமான பயங்கரவாத செயல்' என்று விமர்சித்துள்ள பிரதமர் சயீத். தானும், புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ட்வீட் செய்துள்ளார்.

புதிதாக அமைந்துள்ள அரசை சீர்குலைக்கவே ஈரான் ஆதரவுபெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஏமன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இதையும் படிங்க: ஏமனில் 50 லட்சம் பேர் பஞ்சத்தில் பாதிக்கும் அவலம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.