பீஜிங் (சீனா): சியோமி தங்களின் கைபேசி, டேப்லெட் பயனர்களுக்காக புதிய MIUI 12 பயனர் இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியது.
MIUI 12
- பல மேம்படுத்தப்பட்ட வசதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
- பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
- ஏதேனும் செயலிகள் படக்கருவிகளையோ, ஒலி வாங்கிகளையோ, தொடர்புகளையோ, இருப்பிடத்தையோ அணுக முற்பட்டால், உடனடியாக பயனர்களுக்கு சமிக்கை தரும் வண்ணம் புதிய இயங்கு தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- ஆண்ட்ராய்டு 10 சைகைகள், புதிய விரைவான பதில் அம்சம், மிதக்கும் திரையமைப்புகள், மிராகாஸ்ட் காஸ்டிங் ஆகியவை உள்ளடங்கியுள்ளன.
என்னய்யா இது ஐபோன் மாதிரியே இருக்கு... ஹெச்டிசியின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ்!
இது பயனர்களுக்கு ஜூன் மாத இறுதியில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் பயனர்களின் தகவல்களைத் திருடுவதாக சியோமி நிறுவனத்தை பல நாடுகள் தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.