ETV Bharat / international

கரோனா நிதியுதவி பெறுவதில் தள்ளுமுள்ளு - பெண் உயிரிழப்பு - 20 others injured in Pakistan stampede for coronavirus

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கரோனா நிவாரண நிதி வழங்கும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்தார்.

sd
sdsd
author img

By

Published : Apr 11, 2020, 12:45 PM IST

உலகை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் காரணமாகப் பல நாடுகள் முடங்கியுள்ளன. இதனால், தினசரி வேலைக்குச் செல்பவர்களின் வாழ்கையில் இருள் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் அரசு நாட்டில் குறைந்த வருமானம் பெறும் 10.2 மில்லியன் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்க முடிவு செய்திருந்தது. அதற்கான திட்டம் முதலாவதாக முல்தான் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் தொடங்கியது. இந்தப் பணத்தைப் பெறுவதற்கு நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்தக் கூட்ட நெரிசலில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காயமடைந்த 20 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கரோனா: மற்ற நாடுகளை விட ஒரே நாளில் அதிக உயிரிழப்புகளை பதிவு செய்த அமெரிக்கா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.