இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கரோனா தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள 450க்கும் மேற்பட்ட அமைப்புகளின் இணையதள முகவரிகள், கடவுச் சொற்கள், உடன் பணியாற்றும் மேலும் சில அமைப்புகளின் தகவல்கள் உள்ளிட்டவை திருடப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளது.
திருடி வெளியிடப்பட்டுள்ள இந்தத் தகவல்கள், சமீபத்திய தகவல்கள் இல்லை என்பதால் அது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. எனினும் தாங்கள் இன்றளவும் உபயோகித்துவரும் தங்களது பழைய எக்ஸ்ட்ரா நெட் சிஸ்டத்திலிருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
மோசடியில் ஈடுபடுபவர்கள் இந்தத் தகவல்களைக் கொண்டு மின்னஞ்சல் மூலம் நன்கொடைகள் கேட்டு பொது மக்களை அணுகுமாறும். கரோனா குறித்தத் தகவல்களைப் பெற, நம்பத்தகுந்த தளங்களை அணுகுமாறும் பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: உலக சுகாதார அமைப்பு, உலக வங்கியிடம் ஹேக்கர்கள் கைவரிசை: ஆயிரக்கணக்கில் மின்னஞ்சல்கள், பாஸ்வேர்டுகள் லீக்!