இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, "கரோனா பெருந்தொற்று மற்ற நாடுகளைப் போன்று சீனாவையும் பாதித்துள்ளது.
ஆனால், துரதிருஷ்டமாக கரோனா வைரஸ் போன்று அரசியல் வைரஸ் ஒன்று அமெரிக்காவில் பரவி வருகிறது. அந்த வைரஸின் நோக்கம் சீனா மீது தாக்குதல் நடத்தி நம்பகத்தன்மையைக் குறைப்பதாகும். சில அமெரிக்க அரசியல்வாதிகள், எந்த அடிப்படை ஆதாரங்களுமின்றி பொய்க் கூறி வருகின்றன. சீனாவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டி வருகின்றனர்.
சீனாவுக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள் சர்வதேச சட்டவிதிகளுக்கு முரணானது, மனசாட்சிக்கு எதிரானது. இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்யும் நபர்கள், பகல் கனவு காண்கின்றனர்.
கரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்காவுடன் சீனா ஒன்றிணைந்து பணிபுரிய தயாராக உள்ளது. ஆனால், சில அரசியல்வாதிகள் இதற்கு இடையூராக உள்ளனர், இருநாட்டுக்கும் இடைேய புதிய பனிப் போரை உண்டாக்க முயற்சிக்கின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஒடிசாவில் ஆன்லைன் மது விற்பனை தொடக்கம்!