உலகெங்கும் வாழும் தமிழர்கள் சித்திரை முதல் நாளான தமிழ்ப் புத்தாண்டை இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடிவருகின்றனர்.
புத்தாண்டு கொண்டாடும் தமிழர்களுக்கு பிரதமர் மோடி, உள் துறை, அமித் ஷா, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அந்த வகையில், சர்வதேச தலைவராக அறியப்படும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடல் கடந்த இருந்தாலும் மக்களின் மனத்தை அறிந்துகொண்டு தனது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தனது மனைவி ஜில்லுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வைசாகி, நவராத்திரி, சொங்கரன் மற்றும் இந்த வாரத்தில் புத்தாண்டு உள்ளிட்டவற்றைக் கொண்டாடும் தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியன் சமூகங்களுக்கு என் சார்பிலும், ஜில் (பைடன் மனைவி) சார்பிலும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெங்காலி, கம்போடியன், லாவோ, மியான்மரிஸ், நேபாளி, சின்ஹாலிஸ், தமிழ், தாய், விஷு புத்தாண்டு நல்வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.