கடலுக்கடியில் இருக்கும் ரகசிய உலகத்தை காணவும், அறிய வகைச் சார்ந்த மீன்களை கண்டு ரசிக்கவும் பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்துவருகிறது. ஆனால், சிலருக்கு அதுதான் பொழுதுபோக்காக இருக்கிறது. அந்த வகையில் வாடகை போக்குவரத்துத் துறையில் சிறந்து விளங்கும் உபேர் நிறுவனம் தற்போது ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. உபேர் நிறுவனம் முதன் முறையாக கடலுக்கடியில் சுற்றுலா செல்லும் வாகனத்தை அறிமுகம் செய்து பரிசோதனை முறையில் வெற்றி கண்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பகுதியில் கிரேட் பேரியர் ரீஃப் (great barrier reef) என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை பகுதியை கடலுக்குள் சென்று காணக்கூடிய வாகனம் ஒன்றை உபேர் நிறுவனம் தயார் செய்துள்ளது. எஸ்.சி. உபேர் என்று பெயர் சூட்டியுள்ள நீர்மூழ்கி வாகனத்தில் இருவர் மட்டும் பயணிக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்.சி. உபேர் கடலுக்குள் 20மீட்டர் தூரம் வரை செல்லும்.
இந்நிலையில், இந்த வாகனத்தில் பயணிக்க நபர் ஒருவருக்கு இந்திய பணமதிப்பில் எழுபதாயிரம் ரூபாய் வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த சோதனை ஓட்டம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, எஸ்.சி. உபேர் நீர்மூழ்கி வாகனத்தில் பயணிக்க இன்று முதல் ஜூன் 18ஆம் தேதி வரை சலுகை காலத்தை உபேர் நிறுவனம் அறிவித்துள்ளது.
-
Ever wanted to experience the #GreatBarrierReef via submarine?! As of today, now you can see the reef like never before 👀
— Queensland Australia (@Queensland) May 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Allow us to introduce: #scUber, brought to you by us and @Uber.
To win a ride, click here NOW 👉 https://t.co/8uK2b7mRb2#thisisqueensland #Uber pic.twitter.com/lCbwifHc5x
">Ever wanted to experience the #GreatBarrierReef via submarine?! As of today, now you can see the reef like never before 👀
— Queensland Australia (@Queensland) May 23, 2019
Allow us to introduce: #scUber, brought to you by us and @Uber.
To win a ride, click here NOW 👉 https://t.co/8uK2b7mRb2#thisisqueensland #Uber pic.twitter.com/lCbwifHc5xEver wanted to experience the #GreatBarrierReef via submarine?! As of today, now you can see the reef like never before 👀
— Queensland Australia (@Queensland) May 23, 2019
Allow us to introduce: #scUber, brought to you by us and @Uber.
To win a ride, click here NOW 👉 https://t.co/8uK2b7mRb2#thisisqueensland #Uber pic.twitter.com/lCbwifHc5x
மேலும், இதற்கென்று பிரேத்யக செயலியையும் உபேர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.