டோக்கியோ: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் அனைத்தும் அடுத்த ஆண்டில் நடைபெறும் என ஒலிம்பிக் ஆணையமும், ஜப்பான் அரசாங்கமும் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, 2021 ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்ட பன்னாட்டு ஒலிம்பிக் ஆணைய தலைவர் பேசுகையில், அடுத்த ஆண்டில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும். குறைவான பார்வையாளர்களுடன் போட்டிகளை பாதுகாப்பான முறையில் நடத்த முடியும் என தற்போது நடைபெறும் விளையாட்டு போட்டிகள் காட்டுகின்றன. இவை எங்களுக்கு புதிய நம்பிக்கைகளைத் தருகிறது.
இருப்பினும், போட்டிகளில் பங்கேற்க போதுமான அளவு பார்வையாளர்களை தேடிவருகிறோம். மிகவும் பாதுகாப்பான முறையில் போட்டிகளை கையாளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். போட்டியாளர்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பார்வையாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு அம்சங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக ஜப்பான் பிரதமரை சந்தித்த தாமஸ் பாக், 2021இல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதை உறுதிப்படுத்திக் கொண்டார்.
இதையும் படிங்க: ரசிகர்கள் முன்னிலையில் டோக்கியோ ஒலிம்பிக்: தாமஸ் பேச் உறுதி