ஜப்பான் நாட்டின் தென்பகுதியில் உள்ள கியூஷூ தீவுக்குட்பட்ட மியாசாக்கி மாவட்டத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். இன்று பிற்பகல் 3.38 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.4 ஆக பதிவானது. இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த நிலநடுக்கத்துக்கு முன்னதாக இன்று காலை சுமார் 9 மனியளவில் மியாசாக்கி, எஹைம், கோச்சி, குமாமொட்டோ, ஓய்ட்டா உள்ளிட்ட பகுதிகளில் 3 முதல் 4 ரிக்டர் வரையிலான நில அதிர்வுகள் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேபோல் கடந்த நவம்பர் மாதம் 5 ஆம் தேதி ஜப்பானில் உள்ள ஹோக்கய்டோ தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.