ETV Bharat / international

சீனாவின் சலாமி ஸ்லைசிங் யுக்தி - ஒரு பார்வை - சீனா பிஎல்ஏ ராணுவம்

சீனாவின் முக்கிய போர் தந்திர முறையான சலாமி ஸ்லைசிங் என்ற தாக்குதல் யுக்தி குறித்த சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம்

China
China
author img

By

Published : Jun 26, 2020, 5:25 PM IST

Updated : Jun 26, 2020, 8:38 PM IST

சலாமி ஸ்லைசிங் என்றால் என்ன?

சீனா தனக்கு எதிரான நாடுகளின் மீது நேரடியாக தாக்குதல் நடத்தாமல், தனது ராஜதந்திரத்தால் அவர்களை குழப்பி, ஆக்கிரமிப்பு செய்யும் தன் மீது துல்லியமாகவும் தீர்க்கமாகவும் எதிர்நடவடிக்கைக்கான திட்டங்களை வகுக்கவிடாமல் தடுத்து தனது காரியத்தை சாதிக்கும்.

இது நவீன சீனாவுக்கே உரித்தான தனிச்சிறப்பு. ராணுவ நடவடிக்கைகளை தடாலடியாக ஏவி விடாமல் பொறுமையாக, அதே நேரம் ஸ்திரமாக தனது ஊடுருவல் நடவடிக்கைகளை ரகசியமாக செயல்படுத்தும்.

ராணுவ வழக்கத்தில் சொல்வதானால், சலாமி ஸ்லைசிங் என்பது பிரித்தாளும் ராஜதந்திர செயலாக்கம். எதிர்த்தரப்பு சுதாரிப்பதற்குள் புதிய ஆட்சி எல்லைகளை கைப்பற்றும் நுட்பம்.

சீனாவின் சலாமி ஸ்லைசிங் தந்திரங்கள்

இரண்டாம் உலகப் போருக்குப் பின் சீனா மட்டுமே தனது அண்டை நாடுகளின் எல்லைகளுக்குள் ஊடுருவி தனது ஆட்சிப் பகுதிகளை விரிவுசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. நிலப்பகுதி மட்டுமின்றி கடல் எல்லைப் பகுதிகளையும் சீனா விட்டு வைக்கவில்லை.

திபெத்தை கைப்பற்றியது, அக்சாய் சின் மற்றும் பாராசெல் தீவை ஆக்கிரமித்தது ஆகியவை சீனாவின் விரிவாக்க கொள்கைகளில் சில எடுத்துக்காட்டுகள். சீனா தனது அண்டை நாடுகளின் பிரதேசங்களை கைப்பற்றுவதில் குறிப்பிட்ட யுக்தியை பின்பற்றுகிறது.

முதலில் தான் தேர்ந்தெடுத்த பகுதியின் மீது தனக்கு உரிமை இருப்பதாக சீனா காட்டிக்கொள்ளும். எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அந்தப் பகுதியில் தனக்கு உரிமை இருப்பதாக உரக்கச் சொல்லும். குறிப்பிட்ட நாடு தங்களிடம் பிரச்சனை செய்வதாகவும், தங்களுக்குச் சொந்தமான பகுதியை பிடுங்கிக் கொண்டு தர மறுப்பது போலவும் தோற்றத்தை ஏற்படுத்தி, அதை பிரசாரம் செய்யும். அந்த நாட்டுக்கும் சீனாவுக்கும் நிலப் பகுதி தொடர்பான சிக்கல் நீண்ட காலமாக இருப்பதை உறுதி செய்து விடும்.

இந்த சிக்கலை சரிசெய்ய, ராணுவத்தையும், அதிகாரிகளையும் அனுப்பி நிலைமையை தனக்கு சாதகமாக்கும். அடுத்தவருக்கு சொந்தமான பகுதிகளை ஆக்கிரமிக்கும் சீனாவின் இந்த ராஜதந்திர நடவடிக்கைக்கு சலாமி ஸ்லைசிங் என்று பெயர். இது சலாமி தந்திரங்கள் என்பதிலிருந்து உருவானது.

இந்த சொல்லாடலை முதலில் பயன்படுத்தியவர், ஹங்கேரியின் கம்யூனிச அரசியல்வாதி மத்யாஸ் ரகோசி. 1940களில் கம்யூனிசம் சாராத அரசியல் கட்சிகளை துண்டாடி தனக்கு சாதகமாக்கும் தனது கொள்கையை “சலாமியை துண்டு துண்டாக வெட்டுவது போல அவர்களை துண்டாடி காரியம் சாதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். சலாமி ஸ்லைசிங் தந்திரத்தை ‘முட்டை கோஸ் தந்திரம்’ என்றும் ராணுவ தரப்பில் கூறுகின்றனர்

சலாமி ஸ்லைசிங்கை சீனா கையில் எடுத்தது எப்படி

மெயின்லாண்ட் சீனாவில் 1948ம் ஆண்டு சீன கம்யூனிச கட்சியினர் குவோமிண்டாங் என்ற கொள்கையை கொண்டு வந்தனர். அப்போது திபெத் சுதந்திர நாடாக இருந்தது, அதை புத்த பிட்சுக்கள் ஆண்டனர்.

சீன மக்கள் சுதந்திர ராணுவம் திபெத்திற்குள் ஊடுருவி, மொத்த ராஜ்ஜியத்தையும் கைப்பற்றியது. பண்டைய காலத்தில் அது சீனாவின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்ததாக சீனா காரணம் கூறியது. அத்துடன் நிற்காமல் திபெத் பீடபூமியின் மேற்கு முனையில் உள்ள கிழக்கு லடாக்கில் அமைந்துள்ள ஜிங்ஜியாங் பகுதியும் தங்களுக்குச் சொந்தம் என வாதிட்டது. இந்த இரண்டு பகுதிகளால் சீனாவின் அதிகார எல்லை அதிகரித்தது.

ஆரம்பகாலத்தில் சீனாவின் இந்த சலாமி ஸ்லைசிங் கொள்கை நல்ல பலனையும், ஆட்சிப் பகுதிகளையும் சீனாவுக்கு பெற்றுத் தந்தது, 1954 மற்றும் 1962ம் ஆண்டுகளுக்குள் ஸ்விட்சர்லாந்து அளவுள்ள அக்சாய் சின் பீடபூமியின் பரப்பளவு அதிகரித்தது.

இந்திய எல்லையில் எங்கே சலாமி ஸ்லைசிங் பயன்படுத்தப்படுகிறது

இந்திய – சீன எல்லைப் பகுதிகளில் உள்ள 90,000 சதுர கிமீ பரப்பளவுள்ள மிக முக்கிய பகுதியான அருணாச்சல பிரதேசத்தை, தெற்கு திபெத்தின் அங்கம் என்று சீனா உரிமை கொண்டாடியது.

உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளை ஆக்கிரமிக்க உரிமை கோரிய சீனா, இப்போது ஒட்டு மொத்த கால்வான் பள்ளத்தாக்கின் மீதும் கண் வைத்துள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தானின் வசமுள்ள ஜம்மு காஷ்மீரின் காரகோரம் பகுதியில் 6000 சதுர கிமீ பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் கிழக்கத்திய விரிவாக்கம்

திபெத் மற்றும் இந்தியாவிடமிருந்து இமயமலைப் பகுதிகளை ஆக்கிரமித்த பின், அதே சலாமி ஸ்லைசிங் தந்திரத்தைப் கிழக்கு எல்லைகள் மீது சீனா பயன்படுத்தியது. வியட்நாமிடம் இருந்து 1974ம் ஆண்டில் பாராசெல் தீவுகளை கைப்பற்றியது. தனது சட்டத்துக்கு புறம்பான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்காக, அங்கு சன்ஷா நகரத்தை உருவாக்கியது.

பாராசெல் தீவுகளுக்கு முன்பே, 1988ம் ஆண்டு ஜான்சன் தீவை வியட்நாமிடமிருந்து சீனா பிடுங்கியது. 1995ம் ஆண்டு மிஸ்சீப் தீவு மற்றும் 2012ம் ஆண்டு ஸ்கார்போரோக் ஷாவோல் ஆகிய தீவுகளை முறையே பிலிப்பைன்ஸ் மற்றும் தென் சீனக் கடலில் இருந்து சீனா கைப்பற்றியது.

இப்போதும் தனது அண்டை நாடுகளின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளை சீனா தொடர்கிறது. அவர்கள் கண் வைத்துள்ள பகுதிகளில் முக்கியமானது, ஜப்பானுக்கு சொந்தமான சென்காகு தீவு.

சீனா இந்தத் தீவை தியாவு என்று அழைக்கிறது. ஐநாவும் ஜப்பானும் இந்த உரிமை கோரலை நிராகரித்த போதும், தனது தந்திரங்களால் அந்த சென்காகு பிராந்தியத்தை சர்ச்சைக்குரியதாகி, தங்களுக்கு சொந்தம் இருப்பதாக உரிமை கொண்டாடுகிறது.

கோவிட் 19 நேரத்தில் சீனாவின் சலாமி ஸ்லைசிங்

உலகமே நோய்த்தொற்றால் அவதியுறும் இந்த நேரத்திலும், தனது ராணுவத்தை வைத்து தென் சீனக் கடல் மட்டுமின்றி அதையும் தாண்டி பல பகுதிகளுக்கு சீனா உரிமை கொண்டாடுகிறது.

பல்வேறு சர்ச்சைகளை கண்டுகொள்ளாமல், ஸ்ப்ராட்லி மற்றும் பாராசெல் பிராந்தியங்களில் ஆட்சி மாவட்டங்களை சீனா அறிவித்துள்ளது, அத்துடன் 80 தீவுகளுக்கும் அந்தக் கடல் பகுதியில் பல்வேறு இடங்களுக்கும் பெயரிட்டுள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கையை அதிரடியாக எதிர்க்க முடியாத பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் நாடுகள், சட்டப்பூர்வமாக மட்டும் எதிர்த்து வருகின்றன.

வியட்நாமின் பகுதியை கைப்பற்றியது மட்டுமில்லாமல், அங்குள்ள மீன்பிடி கடல் பகுதியில் கடற்காவல் படை பயிற்சிகளை மேற்கொண்டு சீனா அதிர்ச்சியளித்தது. கடந்த மாதம் தெற்கு கடல் பகுதியில் சீன ராணுவத்தின் கடல் பயிற்சியை சீன ராணுவ தெற்கு கமாண்டர் பார்வையிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீன ராணுவத்தின் இந்த ஆக்கிரமிப்புக்கு தைவான், ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகளும் தப்பவில்லை. சீனாவின் போர் விமானங்கள் கொண்ட குழு தைவான் மற்றும் ஜப்பான் எல்லைக்குள் சுற்றி வந்ததுள்ளது, அதுமட்டுமின்றி தைவானின் விமான தள கட்டுப்பாட்டு பகுதிக்குள் சீனாவின் ராணுவ விமானம் ஆறு முறை ஊடுருவியதால் பரபரப்பு ஏற்பட்டது. தென் சீனக்கடலில் விமானப் படை அடையாளம் காணும் மண்டலத்தை சீனா அமைக்க முயற்சிப்பதாக, தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 2020 மாதத்தில் தென்கொரியாவின் போர் விமான மண்டலத்திற்குள் சீனாவின் ஒய்-9 உளவு விமானம் முன்னறிவிப்பின்றி பறந்ததால் தனது போர் ஜெட் விமானங்களை தென்கொரியா பறக்கவிட்டது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது மட்டுமின்றி, ஜிங்ஜியாங்கில் உள்ள லொப் நுர் பகுதியில் சீனா தனது ஆபத்து குறைந்த அணு சோதனைகள் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு தண்ணீர் நிறுத்தமா? பூட்டான் மறுப்பு

Last Updated : Jun 26, 2020, 8:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.