ETV Bharat / international

30 நாளில் காபூல் தலிபான்கள் கைவசம்- அமெரிக்காவின் மதிப்பீடு - காபூல்

ஆப்கானிஸ்தானில் மேலும் மூன்று மாகணங்களின் தலைநகரங்களை தலிபான்கள் கைப்பற்றியதன் மூலம் அந்நாட்டின் தெற்கு பகுதி முழுவதும் தலிபான்களில் கட்டுப்பாட்டில் வந்துள்ளன.

taliban-sweep-across-afghanistans-south-take-3-more-cities
30 நாளில் காபூல்...அடுத்து நாடு ழுவதும் தலிபான்கள் கைவசம்- அமெரிக்க மதிப்பீடு
author img

By

Published : Aug 13, 2021, 7:06 PM IST

Updated : Aug 13, 2021, 7:23 PM IST

காபூல்(ஆப்கானிஸ்தான்): இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க நேட்டோ படைகளை திரும்பப் பெறுவதாக அந்நாட்டு அரசு அறிவித்து, 95 விழுக்காட்டுக்கும் அதிகமான படைகளை திரும்பப் பெற்றுள்ளது. இந்நிலையில், ஆப்கானின் பெரும்பாலான மாகணங்களை தலிபான்கள் கைப்பற்றிவருகின்றனர்.

தற்போது, அபினி போதைப்பொருளின் மையமாக திகழும், ஹேல்மண்ட் மாகணத்தின் தலைநகரை தலிபான்கள் கைப்பற்றியதன் மூலம் நாட்டிலுள்ள 34 மாகணங்களில் 18 மாகணங்கள் அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதிமுக்கியமாக, நாட்டின் இரண்டாவது, மூன்றாவது பெரிய நகரங்களான கந்தகர், ஹெராத்தும் தலிபான்களின் கட்டுப்பாட்டிலே உள்ளன.

ஆப்கான் தலைநகர் காபூலுக்கு நேரடியாக இன்னும் அச்சுறுத்தல் ஏற்படவில்லை. இருப்பினும், அமெரிக்க ராணுவ உளவுப் பிரிவு மதிப்பீட்டின்படி, 30 நாட்களுக்குள் காபூல் நெருக்கடிக்கு உள்ளாகும் என்பது தெரியவருகிறது. தற்போதைய சூழல் தொடர்ந்தால், சில மாதங்களில் நாடு முழுவதும் தலிபான்களின் கைவசம் செல்லும் எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.

தலிபான்கள் கை ஆப்கானிஸ்தானில் ஒங்கிவரும் சூழலில், மாகணங்களின் ஆளுநர்கள் சிலர் தலிபான்களிடம் சரணடைந்ததாக கூறப்படுகிறது.

ஆப்கானில் பாதுகாப்பு மோசமடைந்துவருவதால், அமெரிக்கா தூதர அலுவலர்களை பாதுகாப்பாக அழைத்துவர அந்நாட்டு அரசு 3,000 ராணுவ வீரர்களை அனுப்ப முடிவுசெய்துள்ளது.

மேலும், இங்கிலாந்தும், கனடாவும் தங்களது தூதரகங்களை காலி செய்ய சிறப்பு படைகளை அனுப்பியுள்ளன.

இதையும் படிங்க: தைவானுக்கு அமெரிக்கா அழைப்பு- கொந்தளிப்பில் சீனா!

Last Updated : Aug 13, 2021, 7:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.