ETV Bharat / international

ஆப்கானிஸ்தான் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு - 19 பேர் மரணம் - சர்தார் தாவூத் கான் ராணுவ மருத்துவமனை

ஆப்கன் ராணுவ மருத்துவமனையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

Kabul hospital
Kabul hospital
author img

By

Published : Nov 2, 2021, 6:18 PM IST

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் உள்ள சர்தார் தாவூத் கான் ராணுவ மருத்துவமனையில் இன்று இரண்டு சக்தி வாய்ந்த குண்டுவெடிப்புகள் ஏற்பட்டன.

இந்த குண்டுவெடிப்பில் இதுவரை 19 பேர் உயிரிழந்ததாகவும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தத் தகவலை தலிபான் துணை செய்தித்தொடர்பாளர் பிலால் கரிமி தெரிவித்துள்ளார்.

ஆப்கனில் அமெரிக்க பாதுகாப்பு படையினர் வெளியேறிதைத் தொடர்ந்து ஜனநாயக அரசு கவிழ்ந்து தலிபான் ஆட்சி அமைத்துள்ளது. நாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வோம் என தலிபான் தெரிவித்த நிலையில், அங்கு இதுபோன்ற பயங்கரவாத நிகழ்ந்தவுகள் நடைபெறுவது தொடர்கிறது.

ஐஎஸ் அமைப்பின் ஊடுருவல் ஆப்கனில் அதிகரித்துள்ளதே இதுபோன்ற பயங்கரவாத நடவடிக்கைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 2070க்குள் கரியமிலவாயு மாசு வெளியேற்றம் பூஜ்ஜியமாக்கப்படும் - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.