ETV Bharat / international

இலங்கை மக்கள் முன்னணி ஆட்சியை கைப்பற்ற தயாராக உள்ளது - ராஜபக்ச

எதிர்கட்சிகளிடம் ஒற்றுமையின்மை மற்றும் ராஜபக்ச சகோதரர்களின் செயல்பாட்டு முறைகளினால் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2020 ராஜபக்ச வெற்றியை உறுதி செய்யுமே தவிர SLPP எதிர்பார்க்கும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காது, ஆனால் தனிப்பெரும் கட்சியாக இருக்கும். இலங்கை மக்கள் முன்னணி ஆட்சியை கைப்பற்றும் என்று கொழும்புவை சேர்ந்த அரசியல் விமர்சகர், புலனாய்வு பத்திரிகையாளர் மற்றும் வழக்கறிஞர் தில்ருக்சி ஹண்டுன்னெட்டி அவர்கள் கூறுகிறார்.

இலங்கை
இலங்கை
author img

By

Published : Aug 6, 2020, 11:41 AM IST

கொழும்பு - சில அரசியல் வர்ணனையாளர்களின் பார்வையில், இலங்கையின் தற்போதைய தேவையான “வலிமைக்கான உணர்வை” வெளிப்படுத்துகிறது. போரினால் பாதிக்கப்பட்ட இந்தியப் பெருங்கடல் தீவு தேசத்தைப் பொறுத்தவரை, சிங்கள பவுத்தர்களின் இன-மத பெரும்பான்மையால் இந்த "வலுவான அரசியல்" தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது.

இலங்கை தனது புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் போது இலங்கை மக்கள் முன்னணியின் தலைவராகவும் இடைக்கால பிரதமராகவும் வழிநடத்தும் இரு ராஜபக்ச சகோதரர்களுக்கு, இது மதம் சார்ந்ததாக மாறி தேர்தலில் வெற்றி பெறும் வழிமுறையாக இருக்கும்.

மேலும் கோவிட்-19 நிலைமையில் தொற்றுநோய் தொடர்பான இறப்புகளை மிகக் குறைந்த விகிதங்களில், 11 இறப்புகள், கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஒரே தெற்காசிய நாடாக தன்னைக் காட்டிக் கொள்கிறது. உலகின் சில பகுதிகள் இன்னும் ஊரடங்கு நிலையில் இருக்கும்போது நாடு தழுவிய நாடாளுமன்றத் தேர்தலை நடத்த இந்த 'வலுவான' பிம்பத்தை மீண்டும் திட்டமிட அரசாங்கம் ஆர்வமாக உள்ளது

"இது அரசியல் தலைமைக்கான உண்மையான சோதனை" என்று நாட்டின் வணிக தலைநகரான கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த SLPP வேட்பாளர் விமல் வீரவன்சா சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கூறினார். ராஜபக்சக்கள் வளர்ச்சிக்கு சிறப்பாக செய்திருக்கிறார்கள் என்பதே பொதுவான எண்ணமாக உள்ளது

தேர்தலுக்கு சுமார் 70 அரசியல் கட்சிகள், 313 சுயேட்சைகள் என மொத்தம் 7,452 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழீழ விடுதலை புலிகளுடனான நீடித்த போரை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை இயல்பான நிலைக்கு திரும்ப வைத்த சக்திவாய்ந்த ராஜபக்ச சகோதரர்கள் நாட்டின் நாயகர்களாக கருதப்படுவது, நாட்டில் பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களை (சீன கடன் மூலம்) செயல்படுத்தியது, தேசிய தேர்தலில் வெற்றி பெறுவது என்பது சிறுபான்மையினர் வாக்குகளைத் திரட்டுவதற்கான திறனைப் பொறுத்தது என்ற கட்டுக்கதையைத் தகர்த்தது, மற்றும் கோவிட்-19 அவசரநிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஒரு தலைமை போன்ற SLPP பற்றிய மற்ற நற்சான்றிதழ்கள் பரப்புரையின் போது கூறுவதற்கு உள்ளன.

இத்தகைய நற்சான்றிதழ்கள் குறிப்பிடத்தக்க தேர்தல் தாக்கத்தை கொண்டிருந்தாலும், இலங்கையின் மிக சக்திவாய்ந்த இரண்டு அரசியல் உடன்பிறப்புகளான அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் அவரது மூத்த சகோதரரும் இரண்டு முறை அதிபருமான மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

சராசரி வாக்காளருக்கு ஒரு வசீகரம் ஏற்படுத்தும் ஒன்றுபட்ட முன்னணியை அமைப்பதில் பெயர் பெற்ற ராஜபக்சக்களுக்கு பாராளுமன்ற அதிகாரத்தைப் பெறுவதற்கான அவர்களின் கூட்டுத் தேவைக்கு அப்பால், கருத்து வேறுபாடுக்கான காரணங்கள் முற்றிலும் வேறுபட்டவை. ஆனால் இது சக்தி வாய்ந்த கூட்டணியை மட்டுமே பார்க்கும் வாக்காளர்களுக்கு புரிபடவில்லை.

மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை

அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கமசிங்க ஆகியோரின் ஆட்சியில் 2015ல் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை மாற்றியமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்ச, சபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கோருகிறார்.

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் அதற்கு முந்தைய அதிபர்கள் அனுபவித்த தடையற்ற நிர்வாக அதிகாரங்களை மீட்டெடுக்க, ​​தற்போதைய அதிபர் விரும்புகிறார். இதற்கு மாறாக 19வது திருத்தம், நிர்வாக அதிகாரங்களை குறைத்து, பிரதமர் அதிகாரங்களை மேம்படுத்தி, சுதந்திரமாக செயல்படும் ஆணையங்களை அமைப்பதன் மூலம் முக்கியமான பொதுத்துறைகளில் அரசியல் குறுக்கீடுகளை நீக்குவதற்கு வழி வகுத்தது. "சுய ஒழுக்கத்தின் அடிப்படையில் ஒரு நல்லொழுக்க சமுதாயத்தை" உருவாக்குவதாக சபதம் செய்த அதிபருக்கு இந்த அமைப்பு வெறுப்பை ஏற்படுத்துகிறது, மேலும் இந்த செயல்பாட்டில், இராணுவத்தினரை பொது சேவையில் ஈடுபட செய்து, அவர்களில் பலரை முக்கிய பதவிகளில் அமர்த்தியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் என்பது தலைகீழானது அல்ல. 19ஆவது திருத்தம் ஒரு சக்திவாய்ந்த பிரதமரை உருவாக்கியுள்ளதுடன், நிர்வாகம் மற்றும் சட்டமன்றங்களுக்கிடையில் அதிக சமநிலையையும் கொண்டு வந்துள்ளது. தனது சொந்த புகழ் மற்றும் பொது நிதி மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஆகியவற்றால் தேர்தலுக்கு பின், அனுபவமுள்ள ராஜபக்ச பாராளுமன்றத்தை தனது நோக்கத்தை நோக்கி நகர்த்துவதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால் தற்போதைக்கு எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதே முக்கியம்.

தேர்தலில் மஹிந்த ராஜபக்சவிற்கு, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காது என்றாலும், தேர்தல்கள் SLPP என்ற ஒற்றை குதிரை மட்டும் ஓடும் பந்தயமாகும். அதாவது திட்டமிடப்பட்ட வலுவான தலைமை, தகவல் கட்டுப்பாடு, நன்கு நிறுவப்பட்ட பரப்புரை இயந்திரம் மற்றும் பொது நிறுவனங்களில் இராணுவத்தினரை அமர்த்தியது போன்றவை ஆளும் கட்சி வசதியாக வெல்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் காரணிகளாக உள்ளன, இலங்கை சமுதாயத்திற்கு தேவையான ஒழுக்கம் மற்றும் திறமையை ஊக்குவிக்க பின்னவர் கருதுகிறார்.

ஒரு கட்சி இரண்டாகப் பிரிந்து எதிர்க்கட்சி வாக்குகளைப் பிரிப்பதால் பாராளுமன்றத் தேர்தலில் பிரதான வேட்பாளரான ராஜபக்சவிற்கு பிளவுபட்ட எதிர்ப்பின் வடிவத்தில் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது

சிங்கள-பவுத்த பெரும்பான்மையினரின் உரிமை மீறல்களின் மரபு மற்றும் வன்முறை வரலாறு இருந்தபோதிலும், அவர்கள் மீது கணிசமான மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இதற்கு நேர்மாறாக, பிரதான எதிர்க்கட்சிகள் முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் வீட்டுவசதி மந்திரி சஜித் பிரேமதாசா தலைமையிலான பிரிந்து சென்ற குழு என்று இரண்டு பிரிவுகளாக இருக்கிறது. ஆயினும் பிரேமதாசாவிற்கு தேர்தல் ஆதாயங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

ஆயினும்கூட, ஆய்வாளர்கள் கூறுகையில், இந்த காரணிகள் அனைத்தும் ராஜபக்ச வெற்றியை உறுதி செய்யுமே தவிர SLPP எதிர்பார்க்கும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காது, ஆனால் தனிப்பெரும் கட்சியாக இருக்கும்.

அண்டை நாட்டுடனான உறவுகள்

சகோதரர்களுக்கு வெவ்வேறு அரசியல் தேவைகள் இருந்தபோதிலும், மஹிந்த ராஜபக்ச நாட்டை சீனாவின் செல்வாக்கின் பாதையில் கொண்டு செல்வார். குறிப்பாக நாடு கோவிட்-19 பொருளாதார தாக்கத்திலிருந்து மீள முற்படுவதால், அவ்வாறு நம்புவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன.

தேர்தல்களை ஆர்வத்துடன் கவனிக்கும் பல நாடுகளில் அமெரிக்காவும், இரண்டு பிராந்திய பெரிய சக்திகளான சீனாவும் இந்தியாவும் உள்ளன. உலகின் பரபரப்பான கப்பல் வழித்தடங்களில் ஒன்றாக உள்ள இந்தியப் பெருங்கடல் தீவின் தற்போதைய நிர்வாகம் சீனாவின் லட்சிய பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியின் (BRI) கீழ் பெரிய அளவிலான உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, கடன் வாங்கியுள்ள நிலையில் சீனாவை நோக்கி பெரிதும் சாய்ந்துள்ளது. அவற்றில் பல திட்டங்கள் ராஜபக்சேவின் சொந்த ஊரான, நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஹம்பாந்தோட்டா பகுதியில் அமைந்துள்ளது.

ஏராளமான நிதி ஆதாரங்களை வழங்குவதில் சீனாவுடன் போட்டியிட முடியாவிட்டாலும், அண்டை தீவில் சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கைப் பற்றி இந்தியா கவலை கொண்டுள்ளது. ராஜபக்சே பதவியில் இருக்கும்வரை, மேற்கத்திய சார்பு வெளியுறவுக் கொள்கையைக் கொண்ட ஒரு நாடாக இருப்பதை இந்தியா விரும்பவில்லை.

இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா இடையே 2019 முத்தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கன்டைனர் முனையத்தின் (ECT) கூட்டு வளர்ச்சி குறித்து இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்று ஜூலை தொடக்கத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டார். ஒரு வலுவான பாராளுமன்ற பெரும்பான்மையைப் பெறுவதில் கவனம் செலுத்தியிருந்த போது தேசிய சொத்துக்களை இந்தியாவுக்கு விற்பதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக இருந்தாலும், பொதுமக்களை திருப்திப்படுத்துவதற்காக ராஜபக்சவை இவ்வாறு கூற வைத்தது.

இருப்பினும், ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை துறைமுக ஆணையம் (SLPA) இந்த வசதியின் 100% உரிமையை வைத்திருக்கும். கூடுதலாக, கொழும்புவில் இருந்து 960 மில்லியன் டாலர் கடனுக்கான கோரிக்கையை, இருதரப்பு மற்றும் சார்க் வழிமுறையின் கீழ் கோரியுள்ளது, இவை அனைத்தும் புது தில்லி கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த வாக்கெடுப்புகள், இலங்கையின் எதிர்கால அரசியல் திசை, நிர்வாக அதிகாரத்தை கட்டமைப்பது, முடங்கிய மனித உரிமை மீறல் செயல்முறைக்கு முடிவு கட்டுவது மட்டுமல்லாமல் இலங்கை சீனாவுடன் நெருக்கமாக செல்வது, புவியியல் ரீதியாக தீவு தேசத்திற்கும் அண்டை நாடான இந்தியாவுக்கும் இடையிலான புதிய பதட்டங்களுக்கும் வழிவகுக்கும் என்பதை சுட்டிகாட்டுவதாகும்

இந்திய -இலங்கை உறவுகள் ஒருபோதும் எளிதானவை அல்ல, பல ஏற்ற இறக்கங்களைக் கண்டன. எவ்வாறாயினும், அடிப்படையில் இந்தியாவின் பிராந்திய பாதுகாப்புக் கவலைகள் மற்ற எல்லா விஷயங்களையும் விட அதிகமாக இருந்தன. டெல்லியின் எதிர்விளைவுகள் இலங்கையில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கின் அச்சத்தை தொடர்ந்து பிரதிபலிக்கின்றன, இது முதன்மையாக இந்திய வர்த்தக விரிவாக்கத்திற்கு அச்சுறுத்தலாகும்.

இந்தியாவுடனான இருதரப்பு உறவுகள் இருக்கும்போது, மஹிந்த ராஜபக்ச 2005 முதல் சீனாவுடன் பகிரங்கமாக பழகினார். சமீபத்திய தொற்றுநோயால் புதிய அரசாங்கத்திற்கு பேரழிவிற்குள்ளான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவைப்படுவதால்,மேலும் வீரியத்துடன் மீண்டும் அதை செய்யக்கூடும், மேலும் தேர்தலுக்கு பிறகு பெய்ஜிங்கை நோக்கி மேலும் சாய்வதற்கான அனைத்து அறிகுறிகளையும் இது காட்டுவதால் புவிசார் அரசியல் ரீதியாக இந்தியப் பெருங்கடல் தீவில் சில பாதுகாப்பு நிலைகளை தக்கவைத்துக்கொள்ள நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.

இதையும் படிங்க: ஹிரோஷிமா அணு ஆயுதத் தாக்குதல் 75 ஆண்டு - கற்க வேண்டிய பாடம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.