ETV Bharat / international

ராஜபக்சவுக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடையாது - கோத்தபய அதிரடி - ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து, நாடாளுமன்றத்தின் பங்கை வலுப்படுத்த்தும் 19ஆவது சட்டத் திருத்தத்தை ரத்து செய்வதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

Sri Lanka Parliament
Sri Lanka Parliament
author img

By

Published : Aug 21, 2020, 2:30 PM IST

கொழும்பு: அதிபரின் அதிகாரங்களைக் குறைத்து, நாடாளுமன்றத்தின் பங்கை வலுப்படுத்த்தும் 19ஆவது சட்டத் திருத்தத்தை ரத்து செய்வதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

"எங்கள் முதல் பணி அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்குவதாகும்” என்று புதிய நாடாளுமன்றத்தின் தொடக்கக் கூட்டத்தின் போது நிகழ்த்திய உரையில் அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கை அரசியலமைப்பில் இறுதியாக 2015ஆம் ஆண்டு சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அரசியலமைப்பின் 18ஆவது திருத்தப்பட்ட சட்டத்தின் மூலம், அதிபராகும் ஒருவர் இரண்டு தடவை மட்டுமே பதவி வகிக்க முடியும் என முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச மாற்றியமைத்திருந்தார்.

இந்த 18ஆவது திருத்தத்தை நிச்சயம் ரத்து செய்வதாக தெரிவித்தே, 2015ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

அதன்படி, 18ஆவது திருத்தத்தின் மூலம் அமல்படுத்தப்பட்ட அதிபரின் மேலதிக அதிகாரங்கள், 19ஆவது திருத்தத்தின் மூலம் குறைக்கப்பட்டன.

2015 ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 19 ஏ, இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் மக்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுத்ததால், ராஜபக்ச குடும்பம் பல விமர்சனங்களுக்கு ஆளானது.

அந்த நேரத்தில், தற்போதைய அதிபர் உள்பட ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களில் இருவர் இரட்டை குடியுரிமை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 5ஆம் தேதி நடந்த தேர்தலின்போது, இலங்கை மக்கள் கட்சி (எஸ்.எல்.பி.பி) அரசியலமைப்பு மாற்றங்களை செயல்படுத்த 225 உறுப்பினர்களைக் கொண்ட சட்டபேரவையில், மூன்றில் இரண்டு பங்கான 150 இடங்களை கோரியது. அவற்றில் முதன்மையானது 19ஏ சட்டத் திருத்தத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை ஆகும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.