ETV Bharat / international

’மக்கள் எதிர்பார்பை பூர்த்திசெய்யும் அரசியல் சட்டம் உருவாக்கப்படும்’ - பிரதமர் மஹிந்தா ராஜபக்சே ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி! - மூத்த செய்தியாளர் ஸ்மிதா சர்மா

டெல்லி: இலங்கையின் 19ஆவது அரசியல் சட்டம் குறித்து புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர் மஹிந்தா ராஜபக்சே ஈடிவி பாரத் ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

Raja
Raja
author img

By

Published : Aug 11, 2020, 3:12 AM IST

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் அதிபரான மஹிந்தா ராஜபக்சேவின் கட்சி பெருவாரியான வெற்றி பெற்றதையடுத்து அவர் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். 2019ஆம் ஆண்டு அவரது சகோதரர் கோத்தபயா ராஜபக்ச அதிபர் தேர்தலில் அபார வெற்றி பெற்ற நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்தாவின் எஸ்.எல்.பி.பி. கட்சி மொத்தமுள்ள 225 இடங்களில் 145 இடங்களை கைப்பற்றியது.

இதையடுத்து அந்நாட்டின் பிரதமராக மஹிந்தா ராஜபக்சே நேற்று முன்தினம் (ஆக.09) பதிவியேற்றுக்கொண்டார். கோவிட்-19 காரணமாக பதவியேற்பு விழா அங்குள்ள புத்தர் ஆலயத்தில் எளிமையான முறையில் நடைபெற்றது.

150 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால், அக்கட்சியின் முக்கிய வாக்குறுதியான 19ஆவது அரசியல் சட்டதிருத்தம் மேற்கொள்ள பிரதமர் மஹிந்தாவுக்கு அதிகாரம் கிடைத்திருக்கும். இந்த முக்கிய விவகாரம் தொடர்பாக ஈடிவி பாரத் செய்தி நிறுவனம் மஹிந்தா ராஜபக்சேவிடம் பிரத்தியேக நேர்காணல் மேற்கொண்டது.

மூத்த செய்தியாளர் ஸ்மிதா சர்மாவிடம் அவர் பேசுகையில், 19ஆவது அரசியல் சட்டம் அரசின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை முற்றிலும் முடக்கிவைத்துள்ளது. இதன் காரணமாகவே மக்கள் முந்தைய அரசை நிராகரித்து பெரும் தோல்வியை அளித்துள்ளனர். எனவே, இலங்கை மக்களுக்கு புதிய சட்டத்திருத்தம் தேவை. வெளிநாட்டு சக்திகளுக்கு பயனளிக்கும் வகையில் அல்லாமல், இலங்கை மக்களுக்கு உதவும் விதமாக மக்கள் எதிர்பார்க்கும் வகையில் சட்டத்திருத்தம் உருவாக்கப்படும். அனைவரிடமும் தீவிரமாகக் கலந்தாலோசிக்கப்பட்டு இந்த மாற்றம் கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அன்றைய அதிபரான மஹிந்தா ராஜபக்சே தோல்வியைச் சந்தித்து, புதிய அதிபராக சிறிசேனா பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போதுதான் இந்த 19ஆவது அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதிபருக்கு இருந்த வானாளாவிய அதிகாரத்தை பரவலாக்கி பிரதமர், நாடாளுமன்றத்திற்கு பகிர்ந்தளிக்கும் விதமாக இந்தச் சட்டத்திருத்தம் அமைந்தது.

தற்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிறிசேனா, ரணில் விக்ரமசிங்கே வெறும் மூன்று விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியைச் சந்தித்துள்ளனர். எஸ்.ஜே.பி. கட்சியைச் சேர்ந்த சஜித் பிரேமதாச 54 இடங்களைப் பெற்று முக்கிய எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளார்.

மஹிந்தா வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பேற்றாலும், அவரது சகோதரரான அதிபர் கோத்தபயாவுடன் எப்படி அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளப் போகிறார் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய - ஜப்பான் கூட்டு முயற்சியில் கொழும்பு துறைமுகத்தில் உருவாக்கப்படவுள்ள கிழக்கு கண்டெய்னர் டெர்மினல் திட்டம் பற்றி மஹிந்தாவிடம் கேள்வி எழுப்பியபோது, இந்த விவகாரம் குறித்து முன்கூட்டியே கருத்து தெரிவிக்க இயலாது எனவும் கேபினெட் கூடி முடிவெடுக்கும் எனவும் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.