ஆஸ்திரேலியாவில் 46ஆவது பொதுத்தேர்தல் நேற்று நடைபெற்றது. வாக்களிக்க தகுதிபெற்ற 16.4 மில்லியன் பேர் இந்த தேர்தலில் பங்கேற்றனர். தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசன் மீண்டும் வெற்றிப் பெற்றுள்ளார்.
தேர்தல் முடிவு குறித்து பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், "சுதந்திர மற்றும் கூட்டணி கட்சிகளை மீண்டும் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தான் எப்போதும் அற்புதங்களை நம்புகிறேன்" என்று உற்சாகமாக உரையாற்றினார். இதற்கிடையே, தொழிலாளர் கட்சியின் தலைவர் பில் ஷார்டன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.