ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க், விளாடிவோஸ்டாக், அஷ்ட்ரகான் உள்ளிட்ட துறைமுக நகரங்களில் கடற்படை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, செயின்ட் பீட்டர்ஸ் நேவா நதியில் நாட்டின் பெரிய கடற்படை அணிவகுப்பு நடைபெற்றது.
அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தலைமைதாங்கி நடைபெற்ற இந்த அணிவகுப்பில் 40 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல், நான்காயிரம் பாதுகாப்புப் படையினர், கடற்படை, விமானக் குழுவினர் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர், புடின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலிருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோக்லாந்து தீவுக்கு படகு மூலம் சென்றார்.