பாகிஸ்தானில் டிக்டாக் செயலிக்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டு, அது உடனடியாக நீக்கப்பட்டது. அங்குள்ள ராவல்பிண்டி மாகாணத்தைச் சேர்ந்த காவல் துறையினர், இந்தச் செயலியை அதிகம் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், அம்மாகாணத்தைச் சேர்ந்த காவல் அலுவலர் ஒருவர், டிக்டாக் காணொலி ஒன்றைப் பதிவு செய்து, அதைத் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்தக் காணொலி காவல்துறை அமைப்பைக் களங்கப்படுத்தும்விதமாக இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், அந்தக் காவலர் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ராவல்பிண்டி காவல் துறையினர் யாரும் டிக்டாக் செயலியை இனி பயன்படுத்தக்கூடாது என அம்மாகணக் காவல் தலைவர் அஷான் யூனாஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதனை மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: 'கரோனா கோ, கரோனா கோ...' முழக்கமிட்ட மத்திய அமைச்சருக்கு கரோனா உறுதி!