கிர்கிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் அல்மாஸ்பெக் அட்டம்பாயேவ். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை கிர்கிஸ்தான் நாட்டின் அதிபராகப் பதவி வகித்தார். இவரது பதவிக்காலம் முடிந்தவுடன் இவர் மீது ஏராளமான ஊழல் புகார்கள் எழுந்ததால், விசாரணைக்கு ஆஜராகும்படி சமன் அனுப்பப்பட்டது. ஆனால், ஆஜராகாததால் இவரைக் கடந்த புதன்கிழமை கைது செய்ய காவல்துறையினர் முயன்றனர்.
இதற்கிடையில், நேற்றிரவு பாதுகாப்புப் படையினர் அதிரடியாக அவரது வீட்டில் நுழைந்து அட்டம்பாயேவைக் கைது செய்தனர். 1991ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த கிர்கிஸ்தான் நாட்டின் முதல் இரண்டு அதிபர்கள் கலவரங்களால் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.