ETV Bharat / international

ஹாங்காங்கில் பொமெரேனியன் நாய்க்கு கொரோனா உறுதி

author img

By

Published : Mar 5, 2020, 2:22 PM IST

ஹாங்காங்: உரிமையாளரிடமிருந்து பொமெரேனியன் நாய்க்கு கொரோனா வைரஸ் பரவிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும் பரவிய முதல் சம்பவம் இதுதான்.

கொரோனா
கொரோனா

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரசுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் பல நாடுகளில் மக்கள் உயிரிழக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறிவரும் நிலையில், மனிதர்களைத் தாக்கும் கொரோனா செல்லப்பிராணிகளுக்கும் பரவும் என்பது ஹாங்காங் பொமெரேனியன் நாய் மூலம் உறுதியாகியுள்ளது.

உரிமையாளர்களிடமிருந்து நாய்க்கு கொரோனா பரவிருக்க வாய்ப்பு உள்ளது என்ற சந்தேகத்தில் அடிப்படையில் பொமெரேனியன் நாயொன்றை நீண்ட நாள்களாக ஹாங்காங் அரசு கண்காணித்துவந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை வரை நாய்க்கு கொரோனா தொற்று இல்லாத நிலையில், நேற்று பரிசோதித்ததில் அது இருப்பது உறுதியானது. மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் இது அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இது குறித்து உலக அமைப்பின் விலங்கு ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், "கொரோனா பாதிப்படைந்துள்ள நாய்க்கு குறைந்த அளவு மட்டுமே தொற்று உள்ளது.

தற்போது நாய் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. கொரோனா பாதிப்பு நாய்க்கு இல்லை என்று தெரியும்வரை தொடர்ந்து சிகிச்சைகள் நடைபெறும்" எனத் தெரிவித்தனர்.

விலங்குகள் அமைப்பினர், மனிதர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுவது மட்டுமின்ற செல்லப் பிராணிகளிமிருந்தும் இடைவெளிவிட்டு இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் தவிக்கும் பொமெரேனியின் நாயின் உரிமையாளரான 65 வயது மூதாட்டி, கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதையும் படிங்க: 'அம்மாவுக்கு கொரோனா' பயத்தில் குளியலறையில் வைத்து பூட்டிய குடும்பத்தினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.