பாகிஸ்தானின் வாசிரிஸ்தான் பகுதி பல ஆண்டுகளாக தலிபான்களின் கோட்டையாகப் பார்க்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் சகோதரிகள் இளைஞர் ஒருவரை முத்தமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் கோபமடைந்த அப்பெண்களின் உறவினர் ஒருவர் அவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார். இந்தச் சம்பவம் நடந்து 5 நாள்கள் ஆகியுள்ள நிலையில், ஆணவக் கொலை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் முகமது அஸ்லாம் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். இதற்கு முன்னதாக சகோதரிகளை முத்தமிட்ட இளைஞரிடம் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தக் கொலையில் உயிரிழந்த பெண்களின் தந்தை, சகோதரர் ஆகியோர் சம்மந்தப்பட்டுள்ளார்களா என்றும் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 2016ஆம் ஆண்டு ஆணவக் கொலை செய்வோருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டது. இதன்பிறகும் காதல், திருமணம் தொடர்பான விசயங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை, அவர்களின் உறவினர்கள் ஆணவக் கொலை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலகமே பற்றி எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னர்கள்!