மும்பை தாஜ் நட்சத்திர விடுதியில், 2008ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நாட்டை உலுக்கி எடுத்த இந்தப் பயங்கர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுள் ஒருவர் அஜ்மல் கசாப். லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அஜ்மல் கசாப், 2012ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.
இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த வலதுசாரி அரசியல் விமர்சகரான ஸயத் ஹமித்தியனின் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அந்த வீடியோவில் ஸயத், "அஜ்மல் கசாப் உண்மையில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவராவார். அவரது இயற்பெயர் அமர் சிங். அதுமட்டுமல்ல, அமர் இந்திய உளவுத் துறையான ராவில் (RAW) உளவாளியாக பணிபுரிந்து வந்தார்" என்று கூறுவது போன்ற அந்த வீடியோ அமைந்துள்ளது. இது சமூகவலைதள வாசிகளிடையே சச்சரவை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிரான கண்டன தீர்மானம்: அடுத்து நடக்கப்போவது என்ன?