பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், அந்நாட்டில் ராணுவ ஆட்சியை அமல்படுத்தியவருமான பர்வேஸ் முஷாரஃப் மீது 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேசத்துரோக வழக்குப் பாய்ந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம், முஷாரஃபை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து கடந்த டிசம்பர் மாதம் மரண தண்டனை விதித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, முஷாரஃப் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் மேல்முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபிதி குல்ஸார் அகமது தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க : ஐசனாவர் முதல் ட்ரம்ப் வரை - இந்தியாவுக்கு விசிட் அடித்த அமெரிக்க அதிபர்கள்!