ETV Bharat / international

கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கையைப் புறக்கணித்த விமானியே விபத்துக்குக் காரணம்! - கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கையை புறக்கணித்த விமானியே விமான விபத்துக்கு காரணம்!

கராச்சியில் சமீபத்தில் விபத்துக்குள்ளான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் விமானம் தரையிறங்க நெருங்கியபோது, விமானி போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் எச்சரிக்கைகளை புறக்கணித்தார் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Pak plane crash  Pilot ignored warning  air traffic control  Karachi Airport  A320 Airbus  pakistan international airlines  Pakistan civil aviation authority  கராச்சி விமானவிபத்து  பாகிஸ்தான் விமானவிபத்து  விமான விபத்து  கராச்சி  பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்
கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கையை புறக்கணித்த விமானியே விமான விபத்துக்கு காரணம்
author img

By

Published : May 25, 2020, 7:56 PM IST

லாகூர் நகரிலிருந்து 91 பயணிகள், 8 ஊழியர்கள் என மொத்தம் 99 பேருடன் புறப்பட்ட பாகிஸ்தான் அரசின் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பிகே 8303 என்ற விமானம் கராச்சியில் குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறிக்கையின்படி, இந்த விமானம் நண்பகல் 1.05 மணிக்கு லாகூர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு நண்பகல் 2.30 மணிக்கு கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டது.

நண்பகல் 2.30 மணியளவில் கராச்சியிலிருந்து 15 கடல் மைல் தொலைவில் விமானம் இருந்தபோது 7,000 அடி உயரத்திற்குப் பதிலாக 10,000 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துள்ளது. விமானம் பறக்கும் உயரத்தைக் குறைக்க விமானிக்கு கட்டுப்பாட்டு அறை அறிவுறுத்தியுள்ளது. விமானம் பறக்கும் உயரத்தை விமானி குறைக்காமல், 'தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை, நான் சமாளித்துவிடுவேன்' எனப் பதிலளித்துள்ளார்.

கராச்சி விமான நிலையத்திலிருந்து 10 கடல் மைல் தொலைவில் விமானம் இருந்தபோதும், விமானக் கட்டுப்பாடு அறை, விமானம் பறக்கும் உயரத்தைக் குறைக்க வலியுறுத்தியுள்ளது. அப்போதும், உயரத்தைக் குறைக்காமல், 'சரியாக தரையிறங்கி விடுவேன்' என விமானி தெரிவித்துள்ளார்.

இருமுறை விமானக் கட்டுப்பாடு அறை விடுத்த எச்சரிக்கையைப் புறக்கணித்ததே விமான விபத்துக்குக் காரணம் என்று தற்போது கூறப்படுகிறது. முன்னதாக விபத்துக்கான காரணம் என்று பாகிஸ்தான், விமானப் போக்குவரத்து அலுவலர் வெளியிட்ட அறிக்கையில், 'முதல் முறையாக விமானம் தரையிறங்கியபோது, விமானத்தின் இன்ஜின் ஓடுதளத்தில் மோதி தீ ஏற்பட்டது. அதுவே விபத்துக்குக் காரணம்' என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: பெர்லினுக்கு வந்த விருந்தாளிகள்... போக்குவரத்தை நிறுத்திய காவல் துறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.