ETV Bharat / international

மியான்மரில் தொடரும் ராணுவ அடக்குமுறை: 13 பேர் சுட்டுக்கொலை - myanmar death toll

யாங்கூன்: மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

Myanmar
மியான்மர்
author img

By

Published : Apr 8, 2021, 10:08 AM IST

மியான்மரில், ராணுவ ஆட்சி பிப்ரவரி 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்டோரை ராணுவம் சிறைபிடித்து வைத்துள்ளது. ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க ராணுவம் துப்பாக்கி சூடு உள்ளிட்ட அடக்குமுறைகளைக் கையாண்டு வருகிறது.

இதுவரை 550-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஐ.நா. சபை, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், நேற்று(ஏப்ரல்.7) ராணுவத்திற்கு எதிராக காலே நகரில் போராட்டக்காரர்கள் நாட்டு துப்பாக்கியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த, ராணுவம் சக்தி வாய்ந்த துப்பாக்கிகளையும், கையெறி குண்டுகளை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏராளமானவர்கள் காயமடைந்ததாகவும், பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: நள்ளிரவில் சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்: 4 வீரர்கள் படுகாயம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.