பெய்ஜிங்: குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2022 சீன தலைநகர் பெய்ஜிங்கில் பிப்ரவரி 4ஆம் தேதி முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 109 வகையான விளையாட்டுகளில் 3,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தியா சார்பாக காஷ்மீரை சேர்ந்த பனிச்சறுக்கு வீரர் ஆரிப் கான் மட்டுமே குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்று, பெய்ஜிங் சென்றுள்ளார். இந்த நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் இந்தியா மேலாளரான முகமது அப்பாஸ் வாணிக்கு நேற்று(பிப்.2) கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவர் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அப்படி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கச் சென்றவர்கள், ஏற்பாட்டாளர்கள் என்று 53 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 12 நாடுகளைச் சேர்ந்த 50 விளையாட்டு வீரர்கள், போட்டி ஏற்பாட்டாளர்கள் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 24 மணிநேர இடைவெளியில் இரண்டு தொடர்ச்சியான கரோனா பரிசோதனை முடிவுகளில், நெகடிவ் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே விடுதியில் இருந்து, வெளியேற அனுமதிக்கப்படுவர் என்று குளிர்கால ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: உலகின் உயரிய விளையாட்டு விருதுக்கு நீரஜ் சோப்ரா பரிந்துரை