ETV Bharat / international

பாங்காங்க் ஏரி பிரச்னை குறித்த சீன வெளியுறவுத் துறையின் விளக்கம்! - இந்திய பாதுகாப்பு படை

பெய்ஜிங்: பாங்காங்க் ஏரியின் தெற்கு கரை எல்லையில் இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய படையினர் யாரும் கொல்லப்படவில்லை என சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

பாங்காங்க் எரி பிரச்னை குறித்த சீன வெளியுறவுத் துறையின் விளக்கம்!

author img

By

Published : Sep 2, 2020, 9:20 PM IST

இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில், இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, வெளியுறவுத் துறை சார்ந்த இருநாட்டு உயர்மட்ட அலுவலர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சீன அரசு இந்திய எல்லையில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்தது.

பின் வாங்கல் நடவடிக்கையில் இறங்கிய சீன ராணுவம் சர்ச்சைக்கு காரணமான கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து விலகி கொண்டாலும் பாங்கோங் ஏரி மற்றும் ரோந்து புள்ளி 17 ஏ என அழைக்கப்படும் கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து செல்ல சீனா தயக்கம் காட்டிவந்தது. இந்நிலையில், அண்மையில் மீண்டும் சீன ராணுவம் பாங்காங்க் ஏரியின் தெற்கு கரை பகுதியில் சீன படையினர் அத்துமீறலில் ஈடுபட்டதாக எல்லை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

பின்னர், இந்திய ராணுவத்தின் விரைந்த நடவடிக்கையை அடுத்து லேசான மோதலுடன் சீன படையின் முயற்சிகள் தடுக்கப்பட்டன. இது தொடர்பாக இன்று (செப்டம்பர் 2) சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் கூறுகையில், "சீனா - இந்தியா எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியான மேற்கு எல்லையில் இருந்து இருதரப்பும் பின்வாங்கும் என்ற ஒருமித்த கருத்தை இந்தியா மீறியது. ஒருதலைப்பட்சமாக நிலைமையை பலத்தால் மாற்றியது. இதனால் தான் எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பொறுப்பு முழுவதும் இந்திய தரப்பில்தான் உள்ளது. இதில் எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை" என தெரிவித்தார்.

இந்திய வெளி விவகார அமைச்சகம் கூறியுள்ள தகவலின்படி, "பெய்ஜிங்குடன் ராஜதந்திர மற்றும் ராணுவ உயர்மட்ட அலுவலர்கள் மூலம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நிலையை சுமூகமாக மாறியது. இந்நிலையில், தற்போது மீண்டும் சீன தரப்பு ஆத்திரமூட்டும் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து தங்கள் முன்னணி படை அணிகளை தடுத்து, கட்டுப்படுத்த சீன அரசை வலியுறுத்தியுள்ளோம்" என தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.