ஆந்திர மாநிலம் பாரடி கிராமத்தைச் சேர்ந்தவர் சமந்தா தல்லியர். இவர் குஜராத் மாநிலம் வடோடாரா பகுதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டு நியூசிலாந்தில் வசித்துவருகிறார்.
பாரடியில் உள்ள தனது தந்தையை சந்திப்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் இந்தியா வந்த அவர் மார்ச் மாதம் நியூசிலாந்து செல்ல திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால் அவரால் மீண்டும் நியூசிலாந்திற்கு செல்ல இயலவில்லை.
இதனையடுத்து இந்தியாவில் சிக்கியுள்ள நியூசிலாந்து நாட்டைச் சேர்நதவர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானம் ஏற்பாடு செய்துள்ளதாகவும், அதற்கான தொகையினை அம்மக்கள் நாடு திரும்பியவுடன் அளிக்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, நியூசிலாந்து செல்ல உதவுமாறு பாரடி நகராட்சியைத் தொடர்புகொண்டார். அப்போது இவருடைய விசா வடோடாராவிலுள்ள அவரது அத்தையுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், பாரடியிலிருந்து வடோடாரா செல்ல அனுமதி வழங்கவேண்டி இணையத்தில் விண்ணப்பிக்குமாறும் கூறினர்.
பின்னர் அனுமதி கிடைக்கப்பெற்றதும் சமந்தா நேற்று தனது ஏழு மாத குழந்தையுடன் சிறப்பு விமானம் மூலம் நியூசிலாந்து சென்றார்.
இதையும் பார்க்க:தனி விமானம் மூலம் இந்தியாவிலிருந்து 4 ஆயிரம் அமெரிக்கர்கள் மீட்பு!