நியூசிலாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதமாகும். இதனை மீறி யாரேனும் கருக்கலைப்பில் ஈடுபட்டால் அவர்கள் மீது குற்றவியல் வழக்கு பாயும்.
இந்த பழமைவாத கட்டுப்பாட்டை நீக்கும் விதமாக, கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் புதிய மசோதா ஒன்றை கொண்டுவர நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி இந்த புதிய சட்டத்தின் கீழ், பெண்கள் விரும்பினால் தங்களது கருவை 20 வாரங்களுக்குள் கலைத்துக்கொள்ளலாம். மேலும், கருக்கலைப்பு மருந்தகம் அருகே பாதுகாப்பு வலையங்கள் அமைத்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்.
இதுகுறித்து அந்நாட்டு நிதி அமைச்சர் ஆண்ட்ரூ லிட்டில் கூறுகையில், "நியூசிலாந்து மருத்துவ நடைமுறையில் கருக்கலைப்பு மட்டுமே குற்றமாக கருதப்படுகிறது. இந்தக் கட்டுப்பாட்டை நீக்குவதற்கான நேரம் வந்துவிட்டது.
பாதுகாப்பான கருக்கலைப்பு சுகாதார பிரச்னையாக கருதப்பட வேண்டும். பெண்கள் தங்களது உடல் குறித்து முடிவெடுப்பதற்கு முழு உரிமையும் உண்டு" எனத் தெரிவித்தார்.