ETV Bharat / international

சீக்கிய மதகுரு குருநானக் பிறந்த தினம் - நேபாளத்தில் 3 நாணயங்கள் வெளியீடு! - 550th birthday

சீக்கிய மதகுரு குருநானக் தேவின் பிறந்த நாளையொட்டி மூன்று நாணயங்களை நேபாள அரசு வெளியிட்டுள்ளது.

சீக்
author img

By

Published : Sep 29, 2019, 12:06 PM IST

தற்போதைய பாகிஸ்தானின் நன்கனா சாஹிப் பகுதியில் பிறந்து சீக்கிய மதத்தைத் தோற்றுவித்து, பரப்பியவர் குருநானக் தேவ். இவர் நேபாளத்தில் உள்ள பலாஜூ பகுதிக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் குருநானக் தேவ், நினைவாக அங்கு அமைக்கப்பட்டுள்ள மடத்தில் அவரது கைகளால் எழுதப்பட்ட சீக்கிய மத ஆவணங்களும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குருநானக் தேவின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் நினைவுகளைப் போற்றும் விதமாக காத்மாண்டுவில் நேற்று அவரது உருவங்கள் பொறித்த நாணயங்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், நேபாள நாட்டின் ரூபாய் மதிப்பில் 100; 1,000; 2,500 ஆகிய மூன்று நாணயங்கள் வெளியிடப்பட்டன.

‘நேபாளத்தில் சீக்கிய பாரம்பரியம்’ என்ற புத்தகமும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. மேலும், நேபாளத்தில் வசிக்கும் சீக்கிய மக்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சீக்கியர்களின் புனித பயணம்: கர்தார்பூர் வழித்தடம் விரைவில் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.