ETV Bharat / international

அண்டை நாடான நேபாளத்தில் கரோனா நிலை என்ன?

author img

By

Published : May 25, 2020, 4:30 PM IST

காத்மாண்டு: நேபாளத்தில் ஒரேநாளில் அதிகபட்சமாக 72 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்நாட்டில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 675ஆக அதிகரித்துள்ளது.

Nepal
Nepal

நாட்டில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்த அதிகரித்துவருகிறது. அதேபோல இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலும் கரோனா தொற்றின் தாக்கம் மோசமாகிவருகிறது. நேபாளத்தில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 24ஆம் தேதிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை மட்டும் நேபாளத்தில் 72 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுதான் ஒரேநாளில் அந்நாட்டில் உறுதிசெய்யப்பட்ட அதிகபட்ச கரோனா வழக்குகளாகும். இதன்மூலம் அந்நாட்டில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 675ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிதாக கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டவர்களில் 26 பேர் ரவுத்தாஹத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், 23 பேர் பரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

அதேபோல காத்மாண்டு, தனுஷா, கபிலவஸ்து ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா மூன்று பேருக்கு கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீநுண்மி பரவல் அதிகரித்ததையடுத்து தலைநகர் காத்மாண்டு பகுதி முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. பிற பகுதிகளிலிருந்து காத்மாண்டு நகருக்குள் வரத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஜூன் 2ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் இதுவரை 675 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளனர். 87 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதையும் படிங்க: 'வூஹான் ஆய்வகங்களில் கரோனா உள்ளது உண்மைதான்; ஆனால்...?'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.