நேபாளத்தில் அந்நாட்டு பிரமதர் கே பி சர்மா ஒலிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று (மே.10) நடைபெற்றது. இதில் பிரதமர் ஒலி தோல்வியடைந்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் குறைந்தது 136 வாக்குகள் தேவை என்ற நிலையில் பிரதமருக்கு ஆதரவாகவும் 93 வாக்குகளே கிடைத்து.
நேபாளத்தில் ஆளும் சி.பி.என். கட்சியில் ஏற்பட்டுள்ள உள்கட்சிப் பிளவு காரணமாக பிரதமர் ஒலிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிரதமர் ஒலிக்கும் முன்னாள் பிரதமர் பிரசன்டாவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது ஆதாரவை பிரசன்டா விலக்கிக் கொண்டார்.
இதையடுத்து, பிரதமர் ஒலி பெரும்பாண்மை இல்லாத அரசை நடத்தும் சூழல் உருவாகியுள்ளது. பிரதமர் ஒலி சீனா ஆதரவு நிலைப்பாட்டில் செயல்பட்டுவந்தாகக் கூறப்படும் நிலையில், இதன் காரணமாக இந்தியா-நேபாள உறவில் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது உரசல்கள் ஏற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.