அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவை, நாடாளுமன்றத்தில் நேபாளா அரசு நேற்று (சனி) தாக்கல் செய்து அதன் மீதான விவாதத்தை நடத்தியது. பின்னர் நடந்த வாக்கெடுப்பில் சபையில் மொத்தமுள்ள 275 உறுப்பினர்களில் மசோதாவுக்கு ஆதரவாக 258 பேர் வாக்களித்தனர். இதையடுத்து மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேறியது.
விரைவில் நேபாளம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. நோபள அரசின் இந்த செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, முக்கிய பகுதிகளான லிபுலேக், கலாபானி மற்றும் லிம்பியாதுரா ஆகியவற்றின் மீது நேபாளம் உரிமை கோரியது. புதிய வரைபடத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கான மசோதாவை பரிசீலிக்கும்படி ஜூன் 9ஆம் தேதி நாடாளுமன்றம் வலியுறுத்தியது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மே 8ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் தார்ச்சுலாவுடன் லிபுலேக் பாஸை இணைக்கும் 80 கி.மீ நீளமுள்ள சாலையை திறந்து வைத்ததை அடுத்து இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான உறவுகள் மோசமாகிவிட்டன.
இதையும் படிங்க: பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு கரோனா!