பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சித் தலைவருமான நவாஸ் ஷெரீப் (69) அல்-அஜிசியா உருக்காலை ஊழல் வழக்கில் கைதாகி, ஏழு ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்துவருகிறார். இதில் நவாஸ் ஷெரீப்பிற்கு நேற்றிரவு மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் லாகூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று அவரது உடல்நிலை மோசமாகியுள்ளதாக அவரது மருத்துவர் ட்வீட் செய்துள்ளார். மேலும், இதயம் நோய், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பதாகவும் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.