உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற சிறப்பைப் பெற்ற மலேசிய பிரதமர் மகாதீர் பின் முகம்மது (94) திங்கள்கிழமை (பிப்ரவரி 24) தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, அங்கு பெரும் அரசியல் குழப்பம் எழுந்தது.
இந்நிலையில், மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா, அந்நாட்டின் எட்டாவது பிரதமராக முஹைதீன் யாசினை இன்று அறிவித்தார். இவர் முன்னதாக மலேசியாவின் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். மலேசிய நாடாளுமன்றத்தில் பெரும்பாலானவர்கள் முஹைதீன் யாசினை ஆதரிப்பதால், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஹைதீன் யாசின் மலேசிய நாட்டின் எட்டாவது பிரதமராக நாளை பதவியேற்கவுள்ளார். அவர் பிரதமராக அறிவிக்கப்பட்டது நாட்டிற்கு நல்லதல்ல என்றும் அது நாட்டின் இஸ்லாம் அடிப்படைவாதக் கொள்கைகளை அதிகரிக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: கொடூர கொரோனா-நாளுக்கு நாள் அதிகரித்துவரும் உயிரிழப்பு எண்ணிக்கை