ETV Bharat / international

கரோனா - முடங்கும் ரஷ்ய தலைநகர்! - ரஷ்யாவில் கரோனா

மாஸ்கோ: கோவிட் -19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ரஷ்ய தலைநகரிலுள்ள மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி அந்நாட்டு அதிபர் புதின் அறிவுறுத்தியுள்ளார்.

Moscow
Moscow
author img

By

Published : Mar 28, 2020, 7:54 PM IST

கோவிட்-19 வைரஸ் தொற்று தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் வேகமாக பரவிவருவதாக உலக சுகாதரா அமைப்பு வேதனை தெரிவித்திருந்தது. இந்நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள மக்களை வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இதுவரை 1,036 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யாவில் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்த நால்வரும் மாஸ்கோவைச் சேர்ந்தவர்கள்.

ரஷ்யாவில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டிலுள்ள அனைவருக்கும் இன்று (மார்ச் 8) முதல் ஏப்ரல் 5 வரை சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாள்களாக அதிபர் புதின் அறித்தார். இந்த நாள்களில் மாஸ்கோவிலுள்ள மக்களை வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த அறிவிப்பு மாஸ்கோவிலுள்ள மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பிறபகுதிகளிலுள்ள மக்கள் மாஸ்கோவிற்கு வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதிபர் புதினின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மாஸ்கோ நகரின் மேயர் செர்ஜி சோபியானின் நகரில் செயல்படும் அருங்காட்சியகங்கள், நூலகங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள், பள்ளிக் கூடங்கள், இரவு விடுதிகள் என அனைத்தையும் மூட உத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும் மருந்தகங்கள், தேவாலயங்கள், உணவகங்கள் செயல்பட எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.

இதையும் படிங்க: கரோனா - போப் ஆண்டவர் தனிமையில் பிரார்த்தனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.