சிறப்பு பல்பொருள் அங்காடியில் ஷாப்பிங் செய்திட முதலை வடிவத்தில் மிகப்பெரிய மிருகம் வந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொருள்கள் வாங்க வந்த மக்கள், மிருகத்தின் என்ட்ரியால் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர்.
தாய்லாந்து நாட்டில் உள்ள செவன்-லெவன் என்ற சிறப்பு பல்பொருள் அங்காடியில்தான் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது. அங்கிருந்த ஷெல்ஃபில், 'மானிட்டர் லிசார்ட்' என்று அழைக்கப்படும் உடும்பு, அங்கு அடுக்கிவைத்திருந்த பொருள்களைத் தள்ளிக்கொண்டு மேலே ஏறுகிறது. மேலும், ஏறியதும் அங்குச் சற்று நேரம் படுத்துக்கொண்டது.
அதன் மிகப்பெரிய உருவம் சிறப்பு பல்பொருள் அங்காடியையே மிரள வைத்துவிட்டது. இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பலரும் 'முதலை ஷாப்பிங் வந்திருக்கா' எனப் பதறிய நிலையில், அது சாதாரண மானிட்டர் லிசார்ட்தான் என ட்விட்டர்வாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.
-
OMFG pic.twitter.com/a2Vbsh4bjf
— Andrew MacGregor Marshall (@zenjournalist) April 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">OMFG pic.twitter.com/a2Vbsh4bjf
— Andrew MacGregor Marshall (@zenjournalist) April 7, 2021OMFG pic.twitter.com/a2Vbsh4bjf
— Andrew MacGregor Marshall (@zenjournalist) April 7, 2021
இந்த மானிட்டர் லிசார்டை, தாய்லாந்தில் பல்வேறு இடங்களில் எளிதாகக் காண முடியுமாம். இவை அழுகிய விலங்குகளின் இறைச்சியை உட்கொள்ளும் பழக்கம்கொண்டது எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வெண்பனியால் சூழ்ந்த இமாச்சல் கிராமம்