நாட்டின் பிரதமாக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற மோடி, இரண்டு நாள் பயணமாக பூட்டானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, பூட்டானின் பாரோ விமான நிலையத்தில் தரையிறங்கிய மோடிக்கு, பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங் உற்சாக வரவேற்பு அளித்தார். தொடர்ந்து, பாரோவின் 'கார்ட் ஆஃப் ஹார்னர்' (Guard of Honor) பாதுகாப்பு படையினர் அளித்த ராணுவ மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.
இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளைப் பலப்படுத்தும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மோடி - லோட்டே ஷெரிங் இடையிலான இச்சந்திப்பு, இரு நாடுகளுக்கிடையேயான அரசியல் உறவுகளைப் பலப்படுத்தும் என்று இந்திய வெளியுறவுத் துறை ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்பயணத்தில் பூட்டானின் நான்காவது மன்னர் ஜிக்மி கேஷர் நம்கியாலையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார்.