ETV Bharat / international

காஷ்மீர் இரு நாடுகளுக்கிடையிலான பிரச்னை - பாகிஸ்தான் - பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு

காஷ்மீர் என்பது இரு நாட்டுக்கும் இடையேயான பிரச்னை என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

Shah Mehmood Qureshi
Shah Mehmood Qureshi
author img

By

Published : Jan 16, 2020, 6:23 PM IST

புதன்கிழமை (ஜனவரி 15) ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்னையை சீனா முன்மொழிந்தது. ஆனால் மற்ற உறுப்பினர்கள், காஷ்மீர் பிரச்னை என்பது இருநாடுகளுக்குமிடையானது என்பதால் இதுகுறித்து விவாதிக்க தேவையில்லை என்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, "காஷ்மீர் பிரச்னை குறித்து பல நாடுகளும் கவலை கொள்கின்றனர். இருப்பினும் இது இரு நாடுகளுக்குமிடையேயான பிரச்னை.

ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக காஷ்மீர் பிரச்னை பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு உள்நாட்டுப் பிரச்னை என்று இந்தியா கூறுவதை பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்தியா மதாச்சார்பற்ற நாடு என்ற நிலையிலிருந்து இந்து ராஷ்டிராத்தை நோக்கி நகர்ந்துவருகிறது. இந்துத்துவ தத்துவங்கள் மக்கள் மத்தியில் சுமத்தப்படுகிறன.

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்களின் பதிவேட்டிற்கு எதிராக இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. காஷ்மீரில் உள்ளதைப் போல ஊடகங்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படாததால் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான போராட்டங்கள் சர்வதேச அளவில் ஒளிபரப்பப்படுகின்றன" என்றார்.

மேலும், இங்கு நிலவிவரும் அசாதாரணநிலை குறித்து ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரெஸுடமும் விளக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக பேசாமல் இருக்கப்போவதில்லை - மலேசிய பிரதமர்

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.