இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 253 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. மேலும், பொது இடங்களில் ஆங்காங்கே உள்ள வெடிகுண்டுகளை ராணுவத்தினர் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், துபாயில் விசாரணை கைதியாக இருந்த இலங்கையின் நிழல் உலக தாதாக்களுள் ஒருவரான மக்கன்டூரி மடூஷ் நாடு கடத்தப்பட்டார். கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் அவரை சி.ஐ.டி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.