'விமானப் பயணமே மிகவும் பாதுகாப்பான பயணம்' என்பார்கள். ஆனால் தொல்நுட்பக் கோளாறு, மனித தவறுகள் காரணமாக அவ்வப்போது ஏற்படும் விமான விபத்துகளில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படும் செய்தியும் நம்மை கலங்கடிக்கத்தான் செய்கிறது.
2010:
மே 22: துபாயிலிருந்து இந்தியா திரும்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737 விமானம், மங்களூருவில் தரையிறங்க முயன்றபோது ஓடுதளத்திலிருந்து விலகி , பள்ளத்துக்குள் விழுந்து வெடித்துச் சிதறியது. விமானத்தில் பயணம்செய்த 152 பேரும் உயிரிழந்தனர்.
2011 :
9 ஜனவரி: ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து 93 பயணிகள், 12 விமானக்குழுவினருடன் புறப்பட்ட ஈரான் ஏர் 277 விமானம், உருமியா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, ஓடுதளத்திலிருந்து விலகி விபத்துக்குள்ளானது. இதில், 77 பேர் உயிரிழந்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது.
8 ஜூலை: காங்கோவின் கிரான்ஷாசா நகரிலிருந்து 112 பயணிகள், 6 விமானக் குழுவினருடன் புறப்பட்ட ஹிவா போரா ஏர்வெஸ் 952 விமானம், கிங்கானி விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. இதில், 74 பேர் உயிரிழந்தனர்.
2012 :
ஏப்ரல் 20: கராச்சியில் 121 பயணிகள், 6 விமானக்குழுவினருடன் புறப்பட்ட போஜா ஏர் ஃபிளைட் 213, இஸ்லாமாபாத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. விமனாத்தில் சென்ற அனைவரும் உயிரிழந்தனர். சம்பவத்தின்போது பெய்த கடும்மழை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது.
ஜூலை 3: நைஜீரியா தலைநகர் அபுஜாவிலிருந்து பயணிகள், விமானக் குழுவினர் என 150 பேருடன் புறப்பட்ட ஏர் 992 விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மக்கள்தொகை அதிகம் கொண்ட லாகோல் நகரின் குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் பணித்த 150 பேரும் லாகோல் நகரவாசிகள் ஆறு பேரும் உயிரிழந்தனர்.
2013 :
17 நவம்பர்: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து 44 பயணிகள், ஆறு விமானக்குழுவினருடன் புறப்பட்ட தான்தார்ஸ்டான் ஏர்லைன்ஸ் 363, காஸான் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது வெடுத்துச் சிதறியது. விமானத்தில் பயணம்செய்த 50 பேரும் உயிரிழந்தனர். விமானியின் தவறால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.
2014 :
20 டிசம்பர்: இந்தோனேசியாவின் சுரபாய் தீவிலிருந்து 155 பயணிகள், ஏழு விமானக்குழுவினருடன் சிங்கப்பூருக்குப் பயணம்செய்த இந்தோனேசியா ஏர் ஏஷியா 8501, கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழுந்து ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 162 பேர் உயிரிழந்தனர்.
ஜூலை 17: ஜெர்மனியின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து 283 பணிகள், 15 விமானக்குழுவினருடன் கொலாலம்பூர் நோக்கி பயணம்செய்த மலேசியா ஏர்லைன்ஸ் 17, உக்ரைன் வழியாக பயணம்செய்தபோது ஏவுகணையால் தாக்கப்பட்டு ஆகாயத்திலேயே வெடித்துச் சிதறியது.
விமானத்தில் சென்ற 298 பேரும் உயிரிழந்தனர். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலுக்கு ரஷ்ய பாதுகாப்புப் படையே காரணமென விசாரணையில் தெரியவந்தது.
மார்ச் 8: கொலாலம்பூரிலிருந்து 227 பயணிகள், 12 விமானக்குழுவினருடன் சீனத் தலைநகர் பெய்ஜிங் நோக்கிப் பயணம்செய்த மலேசியா ஏர்லைன்ஸ் 370 விமானம், புறப்பட்ட 38 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது தடம்மாறிச் சென்று பின் மாயமானது. இந்த விபத்தில் விமானம் எங்கு சென்றது, அதில் பயணித்த பயணிகளின் நிலை என்ன என்பது இதுவரையிலும் புரியாத புதிராகவே உள்ளது.
2015 :
அக்டோபர் 31: எகிப்து நாட்டின் ஷார்ம்ஸ் எல் ஷெரிக் நகரிலிருந்து 217 பயணிகள், ஏழு விமானக்குழுவினருடன் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகருக்குப் பயணம் மேற்கொண்ட மெட்ரோஜெட் 9268, வெடிகுண்டு தாக்குதலில் நடுவானிலேயே வெடித்துச் சிதறியது. விமானத்தில் சென்ற அனைவரும் உயிரிழந்த நிலையில், தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
ஜூன் 30: ஸ்பெயினின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனிக்குப் பயணம் மேற்கொண்ட ஜெர்மன் விங்ஸ் 9525 விமானம், பிரான்ஸின் நைஸ் நகரிலிருந்து 100 கி.மீ. தொலைவில் விழுந்து நொறுங்கியது.
விமானத்தில் சென்ற 144 பயணிகள், ஆறு விமானக்குழுவினர் என அனைவரும் உயிரிழந்தனர். விசாரணையில், தற்கொலை எண்ணத்தால் துண்டப்பட்டு விமான ஓட்டுநர் ஒருவர் தெரிந்தே செய்த தவறால் விபத்து நடந்ததாகக் கண்டறியப்பட்டது.
2018 :
ஏப்ரல் 11 : அல்ஜீரியா தலைநகர் அலிஜீயர்ஸிலிருந்து புறப்பட்ட ராணுவ விமானம், புறப்பட்ட சில நொடிகளில் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது.
இதில் பயணம் செய்த ராணுவத்தினர், அவர்களது குடும்பத்தினர் என 257 பேர் உயிரிழந்தனர்.
அக்டோபர் 28 : 189 பயணிகளுடன் ஜகார்டாவின் சொகார்நோ ஹாடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து, பங்கா பெலிதுங் தீவு நாட்டுக்குப் புறப்பட்ட லயன்ஸ் ஏர் 610 விமானம், புறப்பட்ட சில நொடிகளில் ஜாவா கடலுக்குள் விழுந்து மூழ்கியது. இதில் பயணம்செய்த அனைவரும் உயிரிழந்தனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டது.
2019 :
மார்ச் 19 : எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து 149 பயணிகள், எட்டு விமானக்குழுவினருடன் கென்யா தலைநகர் நைரேபி நோக்கிப் புறப்பட்ட எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் 302 விமானம், புறப்பட்ட ஆறு நிமிடங்களில் கட்டுபாட்டை இழுந்து தரையில் மோதி வெடித்துச் சிதறியது. விமானத்தில் சென்ற அனைவரும் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: 'தண்ணீர்.. தண்ணீர்..!' ஐந்தே நாட்களில் பத்தாயிரம் ஒட்டகங்களை சுட்டு வீழ்த்த ஆஸி., இலக்கு!