பிரெஞ்சு நாட்டில் உள்ள செய்தி நிறுவனம் இஸ்லாம் மதம் குறித்தும் துருக்கி அதிபர் குறித்தும் கேலி சித்திரங்களை வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பிரான்ஸ் நாட்டில் உள்ள தேவாலயத்தில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவர் கத்தியால் குத்தியதில் மூவர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கடந்த கால படுகொலைகளுக்காக பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட வேண்டும் என மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கேலிச்சித்திரம் குறித்த விவகாரம் தொடங்கியதிலிருந்தே பிரெஞ்சு நாட்டுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. துருக்கி அதிபர் குறித்த கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டதால் பிரான்ஸ் நாட்டுக்கு எதிராக தூதரக ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாடு தெரிவித்துள்ளது.