சௌதிரி மில்ஸ் ஊழல் வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்- நவாஸ் கட்சித் துணைத் தலைவர் மரியம் நவாஸை, 2018ஆம் ஆண்டு எக்ஸிட் கன்ட்ரோல் பட்டியலில் (Exit Control List) அந்நாட்டு அரசு சேர்த்தது. இதன்மூலம், மரியம் பாகிஸ்தான் அரசின் உரிய அனுமதியின்றி வெளிநாடு செல்ல முடியாது.
இந்நிலையில், தன் பெயரை எக்ஸிட் கட்ரோல் பட்டியலிலிருந்து நீக்குமாறு மரியம் நவாஸ் கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி லாகூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. நீதிபதி முகமது தஹிர் அபாசி, சௌதிரி முஷ்தாக் அகமது ஆகியோர் இதனை விசாரிப்பர். முன்னதாக, இதே கோரிக்கையை முன்வைத்து மரியம் நவாஸ் டிசம்பர் 7ஆம் தேதி தாக்கல் செய்ய மனுவானது, இரண்டு நாள்கள் கழித்து தள்ளுபடி செய்யப்பட்டது.
சௌதிரி மில்ஸ் வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைதுசெய்யப்பட்ட மரியம் நவாஸ் தற்போது பிணையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஈரான் தாக்குதலில் ஒரு அமெரிக்கர்கூட மரணிக்கவில்லை - ட்ரம்ப்