ETV Bharat / international

இறந்துவிட்டாரா வட கொரியா அதிபர்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி - இறந்து விட்டாரா வட கொரியா அதிபர்

பியாங்யாங்: வட கொரியாவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் கலந்து கொண்டதன் மூலம் அவர் உடல்நிலை குறித்து வெளியான அனைத்து விதமான வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளன.

வட கொரியா அதிபர்
வட கொரியா அதிபர்
author img

By

Published : May 2, 2020, 11:07 AM IST

அணு ஆயுதம், ஏவுகனைச் சோதனைகளை மேற்கொண்டு சர்ச்சை நாயகனாக வலம் வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சில வாரங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துவந்தார்.

இதனிடையே, அவர் உடல்நிலை மோசமாக உள்ளது, கோமாவில் உள்ளார், இறந்துவிட்டார் என கடந்த ஒரு வாரமாக வதந்திகள் வலம் வந்தன. இந்நிலையில், வட கொரிய தலைநகர் பியாங்யாங்கில் அமைந்துள்ள உரத் தொழிற்சாலையின் ரிப்பன் வெட்டும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. நாட்டின் மூத்த அலுவலர்கள், கிம்மின் தங்கை யோ ஜாங் உள்ளிட்ட பலர் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதன் மூலம் அனைத்து விதமான வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கிம் கருப்பு உடை அணிந்து சிரித்துக்கொண்டே ரிப்பன் வெட்டும் புகைப்படம் நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. கிம்முக்கு பின் அவர் தங்கை இருக்கும் புகைப்படமும் தொழிற்சாலை முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இருக்கும் புகைப்படங்களும் நாளிதழ்களில் வெளியாகியுள்ளன.

வெளியான புகைப்படங்களில் அவர் அசௌகரியமாக இருப்பதுபோல் தெரியவில்லை. 2014ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது, அவர் ஊன்றுகோல் பயன்படுத்தி நடந்தார். ஆனால், அதுபோன்ற புகைப்படமும் தற்போது வெளியாகவில்லை.

கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆளும் தொழிலாளர் கட்சி ஏப்ரல் 11ஆம் தேதி ஆலோனைக் கூட்டம் நடத்தியது. அதில்தான் கிம் கடைசியாக கலந்துகொண்டார். பின்னர், கட்சியின் கொள்கை முடிவுகளை எடுக்கும் பொலிட் பீரோவின் உறுப்பினராக கிம்மின் தங்கை யோ ஜாங் நியமிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: கிம் ஜாங் உன் மரணித்து விட்டாரா? புதிய தகவலால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.