மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் கடந்த மாதம் பதவியேற்ற ஒரு வாரத்திலேயே, பூடான் நாட்டுக்குச் சென்ற இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து, தஜிகிஸ்கானில் நடைபெற்ற சி.ஐ.சி.ஏ. என்னும் ஆசியா நாடுகளுக்கான கூட்டமைப்பு மாநாட்டிலும் பங்கேற்றார். இதனையடுத்து, ரஷ்யா துறை பிரதமர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு உயர் அலுவலர்களைத் தொடர்ந்து சந்தித்துவருகிறார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளரின் இந்திய வருகை, பிரதமர் மோடியின் ஜி 20 மாநாட்டின் ஜப்பான் பயணம் ஆகியவை அடுத்த வார இறுதியில் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்தகைய சூழலில், இந்தியாவிற்கான வெளிநாட்டுத் தூதர்களுக்கு, தனியார் விடுதியில் இரவு விருந்து ஒன்றை நேற்று (சனிக்கிழமை) ஏற்பாடு செய்திருந்தார். இதில், வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கேசவ் கோகலே உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தூதர்கள் பங்கேற்றனர்.
இது தொடர்பாக, இந்தியாவிற்கான ஜெர்மன் தூதர் வால்டர் ஜி. லிண்ட்னர் தனது ட்விட்டரில் பக்கத்தில், "வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்காக, வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கேசவ் கோகலே சிறந்த விருந்தை ஏற்பாடு செய்தார். உலகம் மிகச் சிறந்தது, நீண்ட நாள் நண்பர்களைச் சந்திக்க முடிந்தது" எனப் பதிவிட்டுள்ளார்.