ETV Bharat / international

நேரடி ஒளிபரப்பில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்! - கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெஞ்சமின் நேதன்யாகு

கரோனா தொற்றுக்கான தடுப்பூசியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பில் போட்டுக்கொண்டார்.

Israeli PM joins world leaders getting corona vaccine

author img

By

Published : Dec 20, 2020, 9:41 AM IST

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சனிக்கிழமையன்று கரோனா தடுப்பூசியை நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பில் போட்டுக்கொண்டார். இதன்மூலம் கரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட உலகத் தலைவர்களின் பட்டியலில் அவர் இடம்பெற்றுள்ளார்.

இன்று (டிச. 20) முதல் இஸ்ரேல் நாட்டின் சுகாதார ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, நாட்டின் முதல் நபராக கரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக பேசிய அவர், இந்தத் தடுப்பூசியை தான் நம்புவதாகவும், இஸ்ரேல் நாடு அதன் இயல்பு நிலைக்கு திரும்பப்போவது தனக்கு உற்சாகமான தருணம் எனவும் தெரிவித்தார்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த நிகழ்வு இஸ்ரேல் பிரதமரின் அரசியலுக்கு சற்று ஆதரவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தடுப்பூசி போட்டப்பிறகு ஒவ்வாமை இருந்தால் அதை தெரிந்துகொள்ள பெஞ்சமின் நேதன்யாகு அறை மணி நேரம் கண்காணிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசியை முதல் நபராகப் பெறத் தயாராகும் இஸ்ரேல் பிரதமர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.