இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பாலி தீவில் நங்கல 402 என்கிற நீர்மூழ்கி கப்பலில் ராணுவத்தினர் நேற்று(ஏப்ரல்.21) பயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 53 ராணுவ வீரர்கள் இடம்பெற்ற அந்தக் கப்பல், பாலியிலிருந்து 90 கிமீ தொலைவில், கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்து மாயமானது
நீர்மூழ்கி கப்பலின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாததால், போர்க்கப்பல்களை களமிறக்கி தேடுதல் பணியை துரிதப்படுத்தினர். மேலும், நீர்மூழ்கி மீட்பு கப்பல்களை வைத்துள்ள ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரிடம் உதவி கோரியுள்ளதாக கூறப்படுகிறது. கப்பலை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 53 வீரர்களின் நிலை என்ன என்பது கேள்விகுறியாக உள்ளது.
இந்தக் கப்பல் 44 ஆண்டுகள் பழமையான ஜெர்மானிய தயாரிப்பாகும். 1980ஆம் ஆண்டு முதல் இந்தோனேஷிய கடற்படையில் சேவையாற்றி வருகிறது.
இதையும் படிங்க: தூத்துக்குடி - கேரளா: சிக்கியது ரூ. 1,000 கோடி மதிப்புடைய 400 கிலோ கொக்கைன்!