இதுகுறித்து ரோஸ்டெக் தலைமை செயல் அலுவலர் செம்ஸோவ் பேசுகையில், " எஸ்-400 ஏவுகணையை இந்தியாவில் தயாரிப்பது குறித்து நாங்கள் பேசி வருகிறோம். ஏற்கனவே, ரஷ்யாவின் சுக்கோய்-30 போர் விமானம், டி-80 பீரங்கி (Tanker) உள்ளிட்ட தொழில்நுட்பங்களை உருவாக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.
பிரம்மோஸ் ஏவுகணைகளை இருநாட்டு விஞ்ஞானிகளும் சேர்ந்து இந்தியாவிலேயே தயாரித்தனர்" என்றார்.
கடந்த மாதம், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் சர்ஜி லவ்ராவை (Sergey Lavrov) சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரசாத், இருநாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
முன்னதாக, ரஷ்யாவிடமிருந்து ஐந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்க அந்நாட்டுடன் இந்தியா சுமார் 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. இது அமெரிக்காவை முகம்சுழிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.