இஸ்லாமாபாத் : ஆளுங்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சிக்கு கடந்த 2009-13ஆம் ஆண்டுகளில் ரூ.220 கோடி வரை நிதி வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக கிடைத்துள்ளது.
இது தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டு அக்பர் எஸ் பாபர் குற்றஞ்சாட்டினார். இது குறித்து அவர் கூறுகையில், “கட்சி வங்கிக் கணக்குகளின் முழுமையான விவரங்கள் மற்றும் நாட்டிலும் வெளியேயும் கட்சியின் கணக்குகள் முழுமையான விசாரணைக்கு உள்படுத்தப்பட வேண்டும்.
அப்போதுதான் நமக்கு பெறப்பட்ட நிதியின் உண்மையான அளவு தெரியவரும். உண்மையில், நான் கூறுவதை விட பணத்தின் அளவு பன்மடங்கு அதிகமாக இருக்கும்” என்றார்.
பாபர் இந்த அறிக்கை அந்நாட்டின் தேர்தல் ஆணையத்திடமும் ஒப்படைத்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள பாகிஸ்தானின் பிரபல பத்திரிகையான டானில், “வெளிநாடு மற்றும் உள்நாட்டிலிருந்தும் கட்சிக்கு நிதிகள் கிடைத்துள்ளன. இதில் சில அறியப்படாத நபர்களும் கட்சிக்கு நிதி அளித்துள்ளனர். இதில் சில தடை செய்யப்பட்ட இயக்கங்களும் உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கர்தார்பூர் நிகழ்ச்சிக்கு நவம்பர் 9ஆம் தேதியை இம்ரான்கான் ஏன் தேர்வு செய்தார்?